search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலுக்கு சென்றனர்"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து போராடிய நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர்.
    திசையன்விளை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட‌னர். இதனால் கடந்த 23-ந் தேதி முதல் இடிந்தகரை, கூத்தென்குழி, உவரி, பெரு மணல் உட்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தங்களது நாட்டுப்படகுகளை அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப‌ட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மற்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர். 10 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள‌னர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×